கடந்த 11ம் திகதி மட்டக்களப்பு வாவியை கடந்து புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் வந்த காட்டு யானைகள் திசை மாறி தினம் தினம் ஊர் ஊராக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறே புதுக்குடியிருப்பு, கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, எருவில், மகிழூர், ஊடாக கோட்டைக்கல்லாறு ஆற்றங்கரையை அண்மித்த புதர் காடுகளில் தற்போது தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகாலை 3 மணியளவில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பயிர்களையும் பயன்தரு மரங்களையும் சேதப்படுத்திய நிலையில் மகிழூர் முனை களப்பு பகுதியில் தஞ்சமடைந்து பகல்பொழுதை கடத்திய நிலையில் கோட்டைகல்லாறு ஆற்றங்கரை ஓரங்களில் நேற்றையதினம் மாலை வேளையில் யானைகள் நிற்பதை அவதானிக்க முடிந்தது.
இதன் போது சம்பவ இடத்திற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.
வழிமாறி திரியும் காட்டு யானைகள் கூட்டம்; தீர்வின்றி அச்சத்துடன் மக்கள் கடந்த 11ம் திகதி மட்டக்களப்பு வாவியை கடந்து புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் வந்த காட்டு யானைகள் திசை மாறி தினம் தினம் ஊர் ஊராக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறே புதுக்குடியிருப்பு, கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, எருவில், மகிழூர், ஊடாக கோட்டைக்கல்லாறு ஆற்றங்கரையை அண்மித்த புதர் காடுகளில் தற்போது தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அதிகாலை 3 மணியளவில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பயிர்களையும் பயன்தரு மரங்களையும் சேதப்படுத்திய நிலையில் மகிழூர் முனை களப்பு பகுதியில் தஞ்சமடைந்து பகல்பொழுதை கடத்திய நிலையில் கோட்டைகல்லாறு ஆற்றங்கரை ஓரங்களில் நேற்றையதினம் மாலை வேளையில் யானைகள் நிற்பதை அவதானிக்க முடிந்தது.இதன் போது சம்பவ இடத்திற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.