அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்திற்கு யாழ் .வசாவிளான் மகா வித்தியாலய அணியும் யாழ் . புங்குடுதீவு மத்திய கல்லூரி அணியும் தெரிவாகியிருந்தன.
இலங்கையிலுள்ள மிக முக்கியமான பாடசாலை அணிகளை தோற்கடித்து யாழ் மாவட்டத்தின் இரு கிராமப்புற பாடசாலைகளின் அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருந்தன.
கடந்த வருடமும் வசாவிளான் மகா வித்தியாலய அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது.
தீவகம் மற்றும் புங்குடுதீவின் வரலாற்றில் முதல்முறையாக தேசிய ரீதியிலான உதைபந்தாட்ட தொடரில் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய சாதனையை இம்முறை புங்குடுதீவு மத்திய கல்லூரி படைத்துள்ளதை எண்ணி நேற்றைய தினம் தீவகம் எங்கும் ஆர்ப்பரிப்பாக காணப்பட்டது.
குறிப்பாக அநுராதபுரம் நோக்கி பேருந்துகளில் ரசிகர்கள் படையெடுத்துச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.
இறுதிப்போட்டியில் வசாவிளான் மகா வித்தியாலய அணி 2-0 என்ற கோல்களின் அடிப்படையில் சாம்பியன் கிண்ணத்தை வென்றிருந்து.
இருந்த போதிலும் முதன்முறையாக தேசிய மட்டத்தில் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய புங்குடுதீவு மத்திய கல்லூரியின் அணி வீரர்களை வரவேற்கும் நிகழ்வு, புங்குடுதீவு பொது அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், புங்குடுதீவு தீர்ப்பாயம் வட்சப் குழுமம் மற்றும் நலன்விரும்பிகள் என்று ஏராளமானவர்கள் ஒன்றுகூடி வேலணை வங்களாவடி சந்தியிலிருந்து பெரும் ஆரவாரத்துடன் புங்குடுதீவு மத்திய கல்லூரி வரை அழைத்து வந்திருந்தினர்.
குறிப்பாக புங்குடுதீவு உலக மையம் ஏற்பாட்டில் புங்குடுதீவு ஆலடி சந்தியில் தமிழர் மரபுக்கு ஏற்ப வீரர்களும், பாடசாலை ஆசிரியர்களும் ஆரத்தி எடுக்கப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு, அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு, போட்டித் தொடரில் கலந்துகொண்ட ஒவ்வொரு வீரருக்கும் தலா 4000 ரூபாய் பெறுமதியான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
புங்குடுதீவு உலக மையம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் கருணாகரன் குணாளன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையினை, புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் நிரந்தர தர்மகர்த்தா குடும்பத்தின் சார்பில் வசந்தி இராசரெத்தினம் (35000 ரூபாய்) , புங்குடுதீவு கண்ணகை கோவிலடி மு.மு அன்னதான மண்டப உரிமையாளரான மு.முத்தையாபிள்ளை ராமச்சந்திரன் குடும்பத்தினர் (30000 ரூபாய்) மற்றும் புங்குடுதீவு உலக மையம் நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் நாவலன் (35000ரூபாய்) ஆகியோர் வழங்கியிருந்தனர்.
கடந்த நான்கு வருடங்களாக புங்குடுதீவு மத்திய கல்லூரியின் ஆண், பெண் உதைபந்தாட்ட, வலைப்பந்தாட்ட அணிகளின் வளர்ச்சிக்காகவும் பாடசாலை மைதானத்தின் அபிவிருத்திக்காகவும் புங்குடுதீவு உலக மையம் தொடர்ச்சியாக பாடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ரீதியில் சாதித்த புங்குடுதீவு மத்திய கல்லூரி உதைப்பந்தாட்ட அணிக்கு மாபெரும் வரவேற்பு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்திற்கு யாழ் .வசாவிளான் மகா வித்தியாலய அணியும் யாழ் . புங்குடுதீவு மத்திய கல்லூரி அணியும் தெரிவாகியிருந்தன. இலங்கையிலுள்ள மிக முக்கியமான பாடசாலை அணிகளை தோற்கடித்து யாழ் மாவட்டத்தின் இரு கிராமப்புற பாடசாலைகளின் அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருந்தன. கடந்த வருடமும் வசாவிளான் மகா வித்தியாலய அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. தீவகம் மற்றும் புங்குடுதீவின் வரலாற்றில் முதல்முறையாக தேசிய ரீதியிலான உதைபந்தாட்ட தொடரில் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய சாதனையை இம்முறை புங்குடுதீவு மத்திய கல்லூரி படைத்துள்ளதை எண்ணி நேற்றைய தினம் தீவகம் எங்கும் ஆர்ப்பரிப்பாக காணப்பட்டது. குறிப்பாக அநுராதபுரம் நோக்கி பேருந்துகளில் ரசிகர்கள் படையெடுத்துச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது. இறுதிப்போட்டியில் வசாவிளான் மகா வித்தியாலய அணி 2-0 என்ற கோல்களின் அடிப்படையில் சாம்பியன் கிண்ணத்தை வென்றிருந்து. இருந்த போதிலும் முதன்முறையாக தேசிய மட்டத்தில் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய புங்குடுதீவு மத்திய கல்லூரியின் அணி வீரர்களை வரவேற்கும் நிகழ்வு, புங்குடுதீவு பொது அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், புங்குடுதீவு தீர்ப்பாயம் வட்சப் குழுமம் மற்றும் நலன்விரும்பிகள் என்று ஏராளமானவர்கள் ஒன்றுகூடி வேலணை வங்களாவடி சந்தியிலிருந்து பெரும் ஆரவாரத்துடன் புங்குடுதீவு மத்திய கல்லூரி வரை அழைத்து வந்திருந்தினர். குறிப்பாக புங்குடுதீவு உலக மையம் ஏற்பாட்டில் புங்குடுதீவு ஆலடி சந்தியில் தமிழர் மரபுக்கு ஏற்ப வீரர்களும், பாடசாலை ஆசிரியர்களும் ஆரத்தி எடுக்கப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு, அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு, போட்டித் தொடரில் கலந்துகொண்ட ஒவ்வொரு வீரருக்கும் தலா 4000 ரூபாய் பெறுமதியான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. புங்குடுதீவு உலக மையம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் கருணாகரன் குணாளன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையினை, புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் நிரந்தர தர்மகர்த்தா குடும்பத்தின் சார்பில் வசந்தி இராசரெத்தினம் (35000 ரூபாய்) , புங்குடுதீவு கண்ணகை கோவிலடி மு.மு அன்னதான மண்டப உரிமையாளரான மு.முத்தையாபிள்ளை ராமச்சந்திரன் குடும்பத்தினர் (30000 ரூபாய்) மற்றும் புங்குடுதீவு உலக மையம் நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் நாவலன் (35000ரூபாய்) ஆகியோர் வழங்கியிருந்தனர். கடந்த நான்கு வருடங்களாக புங்குடுதீவு மத்திய கல்லூரியின் ஆண், பெண் உதைபந்தாட்ட, வலைப்பந்தாட்ட அணிகளின் வளர்ச்சிக்காகவும் பாடசாலை மைதானத்தின் அபிவிருத்திக்காகவும் புங்குடுதீவு உலக மையம் தொடர்ச்சியாக பாடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.