• May 17 2026

அரச வாகனம் மோதியதில் மாடொன்று உயிரிழப்பு

Aathira / May 16th 2026, 1:51 pm
image

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் வைத்து வேன் ரக வாகனம் மாட்டொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்தோருக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (16) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனம் அலுவலக வேலை நிமிர்த்தம் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும்போது வீதியின் குருக்கே நின்ற மாட்டுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  


அரச வாகனம் மோதியதில் மாடொன்று உயிரிழப்பு திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் வைத்து வேன் ரக வாகனம் மாட்டொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.எனினும் வாகனத்தில் பயணித்தோருக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (16) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனம் அலுவலக வேலை நிமிர்த்தம் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும்போது வீதியின் குருக்கே நின்ற மாட்டுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement