யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.1 ஏக்கர் காணிகள் இன்றையதினம்(01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐகம்பத்தினால் ஒரு தொகுதி உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) சிறீமோகனன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
யாழில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஒரு தொகுதி காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு. யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.1 ஏக்கர் காணிகள் இன்றையதினம்(01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது.யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐகம்பத்தினால் ஒரு தொகுதி உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.குறித்த நிகழ்வு இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) சிறீமோகனன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.