• Nov 26 2025

ரந்தேட்டிய விகாரைக்கருகில் முறிந்து விழுந்த பலா மரம் - போக்குவரத்து தடை

Chithra / Nov 26th 2025, 11:30 am
image

கம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதையில் ரந்தேட்டிய விகாரைக்கு அருகில் பாரிய பலா மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையால் அப் பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் மின்சார வயர்களும் அறுந்த நிலையில் காணப்பட்டமையால் உனம்புவ பகுதிக்கு மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. 

கடந்த தினம் இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இவ்வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரந்தேட்டிய விகாரைக்கருகில் முறிந்து விழுந்த பலா மரம் - போக்குவரத்து தடை கம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதையில் ரந்தேட்டிய விகாரைக்கு அருகில் பாரிய பலா மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையால் அப் பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் மின்சார வயர்களும் அறுந்த நிலையில் காணப்பட்டமையால் உனம்புவ பகுதிக்கு மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த தினம் இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இவ்வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement