• Jun 13 2026

மோட்டார் சைக்கிள் - ஹயஸ் விபத்தில் 25 வயது இளைஞர் பரிதாப உயிரிழப்பு!

Ziya / May 15th 2026, 3:22 pm
image

அம்பாந்தோட்டை, பெலியத்தை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


நேற்று மாலை பெலியத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளும், ஹயஸ் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.


இந்த விபத்தின் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரே  உயிரிழந்துள்ளார்.


விபத்துடன் தொடர்புடைய ஹயஸ் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


விபத்து நடந்த விதம் மற்றும் சாரதியின் கவனக்குறைவு குறித்து பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் - ஹயஸ் விபத்தில் 25 வயது இளைஞர் பரிதாப உயிரிழப்பு அம்பாந்தோட்டை, பெலியத்தை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை பெலியத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளும், ஹயஸ் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இந்த விபத்தின் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரே  உயிரிழந்துள்ளார்.விபத்துடன் தொடர்புடைய ஹயஸ் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து நடந்த விதம் மற்றும் சாரதியின் கவனக்குறைவு குறித்து பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement