தேசிய பாதுகாப்புக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்ட ஏழு இரசாயனப் பொருட்கள், தற்போது எந்தவொரு நிறுவனத்தின் கீழும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய 15 இரசாயனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவற்றில் ஏழு இரசாயனங்கள் வெடிபொருள் கட்டுப்பாட்டாளரால் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும், மற்றுமொன்று பூச்சிக்கொல்லிகள் பதிவு செய்யும் அலுவலகத்தால் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மீதமுள்ள ஏழு இரசாயனங்கள் தற்போது எந்தவொரு நிறுவனத்தின் கீழும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர்,
அந்த ஏழு இரசாயனங்களையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இரசாயன ஆயுத உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான தேசிய அதிகார சபையின் கீழ் மேற்பார்வை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அதிக ஆபத்தான 7 இரசாயனங்கள் - பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல் தேசிய பாதுகாப்புக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்ட ஏழு இரசாயனப் பொருட்கள், தற்போது எந்தவொரு நிறுவனத்தின் கீழும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.தேசிய பாதுகாப்புக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய 15 இரசாயனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.அவற்றில் ஏழு இரசாயனங்கள் வெடிபொருள் கட்டுப்பாட்டாளரால் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும், மற்றுமொன்று பூச்சிக்கொல்லிகள் பதிவு செய்யும் அலுவலகத்தால் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.மீதமுள்ள ஏழு இரசாயனங்கள் தற்போது எந்தவொரு நிறுவனத்தின் கீழும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர், அந்த ஏழு இரசாயனங்களையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் இரசாயன ஆயுத உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான தேசிய அதிகார சபையின் கீழ் மேற்பார்வை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.