பிரஜா சக்தி வேலைத் திட்டத்தின் கீழ் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத் திட்டத்துக்கு அமைய திருகோணமலை மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு தம்பலகாமத்தில் இன்று (02) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது தம்பலகாமம் கிராம சேவகர் பிரிவின் கள்ளிமேடு பகுதியில் விவசாய வடிகால் கால்வாய் திட்டம் சுமார் 1.5மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள திட்டம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் வெளி விவகார பிரதியமைச்சருமான அருண்ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்தகுமார உட்பட பிரஜா சக்தி தலைவர்கள்,உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் பல்முக வறுமையை ஒழிப்பதற்காக மக்களின் வரிப்பணமாக ரூபா 25,000 மில்லியன் செலவில் கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வளமான நாடு அழகான வாழ்க்கையை உருவாக்கவும் வறுமையை ஒழித்து அபிவிருத்தியை மேம்பாடாக கொண்டு பிரஜா சக்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 11 பிரதேச செயலகப் பிரிவில் இருந்தும் 230 கிராம சேவகர் பிரிவிக்கு குறித்த திட்டத்துக்காக 639.63 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த குறித்த பகுதி விவசாயிகளின் நலனுக்காக கால்வாய் திட்டம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பிரஜா சக்தி திட்டத்துக்காக திருகோணமலைக்கு 639.63 மில்லியன் ஒதுக்கீடு பிரஜா சக்தி வேலைத் திட்டத்தின் கீழ் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத் திட்டத்துக்கு அமைய திருகோணமலை மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு தம்பலகாமத்தில் இன்று (02) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது தம்பலகாமம் கிராம சேவகர் பிரிவின் கள்ளிமேடு பகுதியில் விவசாய வடிகால் கால்வாய் திட்டம் சுமார் 1.5மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள திட்டம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் வெளி விவகார பிரதியமைச்சருமான அருண்ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்தகுமார உட்பட பிரஜா சக்தி தலைவர்கள்,உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இலங்கையில் பல்முக வறுமையை ஒழிப்பதற்காக மக்களின் வரிப்பணமாக ரூபா 25,000 மில்லியன் செலவில் கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வளமான நாடு அழகான வாழ்க்கையை உருவாக்கவும் வறுமையை ஒழித்து அபிவிருத்தியை மேம்பாடாக கொண்டு பிரஜா சக்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 11 பிரதேச செயலகப் பிரிவில் இருந்தும் 230 கிராம சேவகர் பிரிவிக்கு குறித்த திட்டத்துக்காக 639.63 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த குறித்த பகுதி விவசாயிகளின் நலனுக்காக கால்வாய் திட்டம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.