• Apr 15 2026

5,000 சிவில் பாதுகாப்புப் படையினர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு மாற்றம்!

Chithra / Jan 30th 2026, 7:39 am
image

சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், 10,000 பேரை பொலிஸ் துறைக்கும் உள்வாங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து சுமார் 5,000 பேர் வனப்பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள பணிகளுக்காக விடுவிக்கப்படவுள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், சுமார் 10,000 சிவில் பாதுகாப்புப் படையினரை பொலிஸ் திணைக்களத்துடன் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படையணியின் வினைத்திறனை அதிகரிப்பதற்காகப் பயிற்சித் திட்டங்கள், மனித வள முகாமைத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விசேட கவனம் செலுத்தப்படும்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் வனவளப் பாதுகாப்பு ஆகிய இரண்டு முக்கிய துறைகளிலும் நிலவும் ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

5,000 சிவில் பாதுகாப்புப் படையினர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு மாற்றம் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், 10,000 பேரை பொலிஸ் துறைக்கும் உள்வாங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து சுமார் 5,000 பேர் வனப்பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள பணிகளுக்காக விடுவிக்கப்படவுள்ளனர்.பொதுமக்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், சுமார் 10,000 சிவில் பாதுகாப்புப் படையினரை பொலிஸ் திணைக்களத்துடன் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இப்படையணியின் வினைத்திறனை அதிகரிப்பதற்காகப் பயிற்சித் திட்டங்கள், மனித வள முகாமைத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விசேட கவனம் செலுத்தப்படும்.நாட்டின் பாதுகாப்பு மற்றும் வனவளப் பாதுகாப்பு ஆகிய இரண்டு முக்கிய துறைகளிலும் நிலவும் ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement