நாடளாவிய ரீதியில் 1,000 நலன்புரி நிலையங்களை நிறுவும் அரசாங்கத்தின் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி 21 மாவட்டங்களில் 42 புதிய நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலில், சமூக அடிப்படையிலான சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் "ஆரோக்கியமான இலங்கை" (Healthy Sri Lanka) எனும் தொனிப்பொருளின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
2025ஆம் ஆண்டு காலி, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக 5 நிலையங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய இந்த ஆண்டில் மாத்திரம் 250 நலன்புரி நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டாம் கட்டத்தின் கீழ் கொழும்பில் 3, கம்பஹாவில் 2, களுத்துறையில் 3 உட்பட ஏனைய மாவட்டங்களிலும் புதிய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த இரண்டாம் கட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் களுத்துறை மாவட்டத்தின் கானன்வில மற்றும் ஹீனட்டியங்கல ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நலன்புரி நிலையத்திலும் குடும்ப நல மருத்துவர் மற்றும் சமூக சுகாதார செவிலியர் உட்பட எட்டு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையங்கள் மூலம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள், அவசர மற்றும் அன்றாட சுகாதாரத் தேவைகளுக்கான தீர்வுகள், மற்றும் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை வலுப்படுத்துதல் போன்ற சேவைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் ஊடாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் தமது இடங்களிலேயே மேலதிக சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 42 புதிய நலன்புரி நிலையங்கள் திறப்பு: சுகாதார அமைச்சு அறிவிப்பு நாடளாவிய ரீதியில் 1,000 நலன்புரி நிலையங்களை நிறுவும் அரசாங்கத்தின் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி 21 மாவட்டங்களில் 42 புதிய நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலில், சமூக அடிப்படையிலான சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் "ஆரோக்கியமான இலங்கை" (Healthy Sri Lanka) எனும் தொனிப்பொருளின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.2025ஆம் ஆண்டு காலி, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக 5 நிலையங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.அதற்கமைய இந்த ஆண்டில் மாத்திரம் 250 நலன்புரி நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இரண்டாம் கட்டத்தின் கீழ் கொழும்பில் 3, கம்பஹாவில் 2, களுத்துறையில் 3 உட்பட ஏனைய மாவட்டங்களிலும் புதிய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.இந்த இரண்டாம் கட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் களுத்துறை மாவட்டத்தின் கானன்வில மற்றும் ஹீனட்டியங்கல ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.ஒவ்வொரு நலன்புரி நிலையத்திலும் குடும்ப நல மருத்துவர் மற்றும் சமூக சுகாதார செவிலியர் உட்பட எட்டு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையங்கள் மூலம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள், அவசர மற்றும் அன்றாட சுகாதாரத் தேவைகளுக்கான தீர்வுகள், மற்றும் பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை வலுப்படுத்துதல் போன்ற சேவைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.இத்திட்டத்தின் ஊடாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் தமது இடங்களிலேயே மேலதிக சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.