புத்தளம் - ஆனமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே வெட்டப்பட்டிருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவ, சியம்பலாகஸ்ஹேன பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்று சிறுவனின் தாய், வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது சிறுவனை அவரது பாட்டியிடம் ஒப்படைத்துள்ளார்.
பாட்டியின் வீட்டிலிருந்து மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த போதே, மழையினால் நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் சிறுவன் தவறி விழுந்துள்ளார்.
சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததைக் கண்டு தேடியபோது, குழிக்குள் விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மரணப் பரிசோதனை இன்று (30) மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நீரில் மூழ்கியமையாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு புத்தளம் - ஆனமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே வெட்டப்பட்டிருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடுவ, சியம்பலாகஸ்ஹேன பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்தார்.நேற்று சிறுவனின் தாய், வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது சிறுவனை அவரது பாட்டியிடம் ஒப்படைத்துள்ளார்.பாட்டியின் வீட்டிலிருந்து மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த போதே, மழையினால் நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் சிறுவன் தவறி விழுந்துள்ளார்.சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததைக் கண்டு தேடியபோது, குழிக்குள் விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டார்.உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மரணப் பரிசோதனை இன்று (30) மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நீரில் மூழ்கியமையாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.