• Aug 12 2025

மழை அனர்த்தம் காரணமாக யாழில் 32 பேர் பாதிப்பு!

shanuja / Aug 11th 2025, 5:52 pm
image

மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 32பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.


நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வந்தது. அதிலும் யாழ்ப்பாணத்தில் பரவலாக காற்றுடன் மழை பெய்தது. 


திடீரென பெய்த கனமழையால் யாழில் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. 


அந்த வகையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/351 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவரும், ஜே/363 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 7பேரும், ஜே/364 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மழை அனர்த்தம் காரணமாக யாழில் 32 பேர் பாதிப்பு மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 32பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வந்தது. அதிலும் யாழ்ப்பாணத்தில் பரவலாக காற்றுடன் மழை பெய்தது. திடீரென பெய்த கனமழையால் யாழில் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த வகையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/351 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவரும், ஜே/363 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 7பேரும், ஜே/364 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement