• Jun 04 2026

திருகோணமலை மாநகர சபைக்கு 25 நெகிழி குப்பைத் தொட்டிகள்!

shanu / Jun 3rd 2026, 4:43 pm
image


திருகோணமலை மாநகர சபைக்கு 25 நெகிழி குப்பைத் தொட்டிகளை லங்கா இந்தியன் ஆயில் கம்பெனி நன்கொடையாக வழங்கியது. 


தூய்மையான இலங்கைத் திட்டத்தின் கீழும், ஜூன் 5 ஆம் திகதி வரும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும், லங்கா இந்தியன் ஆயில் கம்பெனி (லங்கா ஐஓசி) நேற்று (02) திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் இந்தியன் ஆயில் கம்பெனியின் சிரேஷ்ட பிரதி தலைவர் நவீன் குமார் ஆகியோரின் முன்னிலையில், திருகோணமலை மாநகர சபைக்கு 25 நெகிழி குப்பைத் தொட்டிகளை நன்கொடையாக வழங்கியது.


கிழக்கு ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவின் வேண்டுகோளின் பேரில் லங்கா இந்தியன் ஆயில் கம்பெனி இந்தக் குப்பைத் தொட்டிகளை நன்கொடையாக வழங்கியது.


இந்நிகழ்வில் திருகோணமலை மாநகர சபை மேயர் கே. செல்வரசா, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் லங்கா ஐஓசி அதிகாரிகள் குழுவினர் உடனிருந்தனர்.

திருகோணமலை மாநகர சபைக்கு 25 நெகிழி குப்பைத் தொட்டிகள் திருகோணமலை மாநகர சபைக்கு 25 நெகிழி குப்பைத் தொட்டிகளை லங்கா இந்தியன் ஆயில் கம்பெனி நன்கொடையாக வழங்கியது. தூய்மையான இலங்கைத் திட்டத்தின் கீழும், ஜூன் 5 ஆம் திகதி வரும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும், லங்கா இந்தியன் ஆயில் கம்பெனி (லங்கா ஐஓசி) நேற்று (02) திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் இந்தியன் ஆயில் கம்பெனியின் சிரேஷ்ட பிரதி தலைவர் நவீன் குமார் ஆகியோரின் முன்னிலையில், திருகோணமலை மாநகர சபைக்கு 25 நெகிழி குப்பைத் தொட்டிகளை நன்கொடையாக வழங்கியது.கிழக்கு ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவின் வேண்டுகோளின் பேரில் லங்கா இந்தியன் ஆயில் கம்பெனி இந்தக் குப்பைத் தொட்டிகளை நன்கொடையாக வழங்கியது.இந்நிகழ்வில் திருகோணமலை மாநகர சபை மேயர் கே. செல்வரசா, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் லங்கா ஐஓசி அதிகாரிகள் குழுவினர் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement