• Aug 19 2026

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

Chithra / Aug 18th 2026, 3:16 pm
image


22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு எதிர்க்கட்சி இன்று (18) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.


அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களையும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.


நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை தொடர்பான சட்ட ஏற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் இந்தச் சட்டமூலங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


சட்டமூலங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவை தொடர்பான அடுத்தகட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


இந்நிலையில், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாடுகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.


அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், நாட்டின் நீண்டகால அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயக நடைமுறைகளை கருத்திற்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி வலியுறுத்தியது.


இதன்போது, அரசாங்கம் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கையில் கேலிச்சித்திரங்களை ஏந்தியவாறு சபையில் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.


அதேவேளை, பாராளுமன்ற அமர்வுகளின்போது உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு சபாநாயகர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்றும், உறுப்பினர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.


இதன் காரணமாக தற்போதைய சபாநாயகரை மாற்றி, ஜனநாயக ரீதியில் செயற்படக்கூடிய ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




22ஆவது அரசியலமைப்பு திருத்தம்; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு எதிர்க்கட்சி இன்று (18) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களையும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை தொடர்பான சட்ட ஏற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் இந்தச் சட்டமூலங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.சட்டமூலங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவை தொடர்பான அடுத்தகட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.இந்நிலையில், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாடுகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், நாட்டின் நீண்டகால அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயக நடைமுறைகளை கருத்திற்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி வலியுறுத்தியது.இதன்போது, அரசாங்கம் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கையில் கேலிச்சித்திரங்களை ஏந்தியவாறு சபையில் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.அதேவேளை, பாராளுமன்ற அமர்வுகளின்போது உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு சபாநாயகர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்றும், உறுப்பினர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.இதன் காரணமாக தற்போதைய சபாநாயகரை மாற்றி, ஜனநாயக ரீதியில் செயற்படக்கூடிய ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement