• Jul 27 2025

நாடு முழுவதுமான விசேட சுற்றிவளைப்பில் 2024 பேர் கைது

Chithra / Jul 26th 2025, 8:50 am
image


போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கைகளில் 7,100க்கும் மேற்பட்ட பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

இந்த தேடுதல் நடவடிக்கையில் 25,671 நபர்கள், 10,360 வாகனங்கள் மற்றும் 7,833 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன. 

இதன் விளைவாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,504 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

மேலும், இந்த விசேட சோதனைகளின் போது, நேரடி குற்றங்களில் ஈடுபட்ட 22 நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 520 நபர்களும் கைது செய்யப்பட்டனர். 

ஜூலை 18 முதல் 24 வரையிலான வாரத்தில், சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில், பொலிஸார் 2 கிலோகிராமுக்கு மேல் ஐஸ், சுமார் 1 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 300 கிராம் மற்றும் 82 கிலோகிராமுக்கு மேல் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

நாடு முழுவதுமான விசேட சுற்றிவளைப்பில் 2024 பேர் கைது போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நடவடிக்கைகளில் 7,100க்கும் மேற்பட்ட பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த தேடுதல் நடவடிக்கையில் 25,671 நபர்கள், 10,360 வாகனங்கள் மற்றும் 7,833 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன. இதன் விளைவாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,504 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த விசேட சோதனைகளின் போது, நேரடி குற்றங்களில் ஈடுபட்ட 22 நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 520 நபர்களும் கைது செய்யப்பட்டனர். ஜூலை 18 முதல் 24 வரையிலான வாரத்தில், சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில், பொலிஸார் 2 கிலோகிராமுக்கு மேல் ஐஸ், சுமார் 1 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 300 கிராம் மற்றும் 82 கிலோகிராமுக்கு மேல் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement