• May 01 2026

மூதூரில் 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்பு!

Ziya / Feb 5th 2026, 5:36 pm
image

மூதூரில் 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்கப்பட்டுள்ளது.


மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி அண்மைய பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதர்கள் அடங்கிய குழுவினரால் இன்று (05) இடத்தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அவ்வாய்வின் போது, மனித பாவனைக்கு உகந்ததல்லாததும், மனித சுகாதாரத்திற்கு கடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய புழுக்கள் தொற்றுக்குள்ளான நிலையில் இருந்த கருவாடு தயாரிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட சுமார் 1500 கிலோ கிராம் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


சுகாதார விதிமுறைகளை மீறி இவ்வாறு தரமற்ற மீன்களை சேமித்து வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மீன்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. 


மேலும் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பறிமுதல் செய்யப்பட்ட  மீன்கள் பொதுச் சுகாதாரத்திற்கு ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, அவற்றை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.


மனித பாவனைக்கான உணவுப் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், சுகாதார நிலை மற்றும் சேமிப்பு முறைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  

மூதூரில் 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்பு மூதூரில் 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்கப்பட்டுள்ளது.மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி அண்மைய பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதர்கள் அடங்கிய குழுவினரால் இன்று (05) இடத்தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அவ்வாய்வின் போது, மனித பாவனைக்கு உகந்ததல்லாததும், மனித சுகாதாரத்திற்கு கடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய புழுக்கள் தொற்றுக்குள்ளான நிலையில் இருந்த கருவாடு தயாரிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட சுமார் 1500 கிலோ கிராம் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.சுகாதார விதிமுறைகளை மீறி இவ்வாறு தரமற்ற மீன்களை சேமித்து வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மீன்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட  மீன்கள் பொதுச் சுகாதாரத்திற்கு ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, அவற்றை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.மனித பாவனைக்கான உணவுப் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், சுகாதார நிலை மற்றும் சேமிப்பு முறைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement