• Aug 12 2025

கல்வி அமைச்சிலிருந்து 139 வாகனங்கள் மாயம்! அறிக்கையில் அம்பலம்

Chithra / Aug 12th 2025, 11:48 am
image


கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025 மே மாதத்தில் வெளியிடப்பட்ட 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் சில கண்டறிதல்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

அதில் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 

2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சு, கல்வி சீர்திருத்தங்களுக்காக 5,219 மில்லியன் ரூபாய் செலவிட்டதையும், தேசியக் கல்வி நிறுவனம் 350 மில்லியன் ரூபாய் செலவிட்டதையும் அறிக்கை குறிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், இந்தச் சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படவில்லை என்றும், சீர்திருத்தங்களுக்கான தெளிவான வரைபடம், 

2015 மார்ச் 26 வரை கூட தயாரிக்கப்படவில்லை என்றும், அறிக்கை எடுத்துக்காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சிலிருந்து 139 வாகனங்கள் மாயம் அறிக்கையில் அம்பலம் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.2025 மே மாதத்தில் வெளியிடப்பட்ட 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் சில கண்டறிதல்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சு, கல்வி சீர்திருத்தங்களுக்காக 5,219 மில்லியன் ரூபாய் செலவிட்டதையும், தேசியக் கல்வி நிறுவனம் 350 மில்லியன் ரூபாய் செலவிட்டதையும் அறிக்கை குறிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தச் சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படவில்லை என்றும், சீர்திருத்தங்களுக்கான தெளிவான வரைபடம், 2015 மார்ச் 26 வரை கூட தயாரிக்கப்படவில்லை என்றும், அறிக்கை எடுத்துக்காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement