• Apr 30 2026

தென்ஆப்பிரிக்காவில் லாரி மீது பாடசாலை பேருந்து மோதி கோர விபத்து 13 சிறுவர்கள் உயிரிழப்பு

dorin / Jan 19th 2026, 8:48 pm
image

தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பள்ளி மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் 

தனியார் வாகனம் பல்வேறு தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளை ஏற்றிச் சென்றது. இந்த வேன் மற்றொரு வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. 

இதில் 11 பள்ளி சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், படுகாயம் அடைந்த 7 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தென்ஆப்பிரிக்கா அதிபர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவில் லாரி மீது பாடசாலை பேருந்து மோதி கோர விபத்து 13 சிறுவர்கள் உயிரிழப்பு தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பள்ளி மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் தனியார் வாகனம் பல்வேறு தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளை ஏற்றிச் சென்றது. இந்த வேன் மற்றொரு வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 11 பள்ளி சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.மேலும், படுகாயம் அடைந்த 7 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தென்ஆப்பிரிக்கா அதிபர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement