• May 26 2026

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு!

Ziya / Jan 26th 2026, 11:27 am
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர மற்றும் பிரதேசக் கிளை முதல்வர், தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.


அமரரின் அரசியல் பயணம், தமிழர் நலனுக்காக அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகள் மற்றும் அவரது மக்கள் நேசம் அனைவராலும் நினைவுகூரப்பட்டது.



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர மற்றும் பிரதேசக் கிளை முதல்வர், தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.அமரரின் அரசியல் பயணம், தமிழர் நலனுக்காக அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகள் மற்றும் அவரது மக்கள் நேசம் அனைவராலும் நினைவுகூரப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement