அனுராதபுரத்தில் இருந்து பதுளைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சிற்றூர்ந்தின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது காயமடைந்தவர்களை காலவ்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த விபத்தில் சிற்றூர்ந்து பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைகிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹியங்கனை விபத்தில் 11 பேர் மருத்துவ மனையில் அனுமதி மஹியங்கனை - கிராதுருகொட்ட பிரதான வீதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற சிற்றூர்ந்து விபத்தில் 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பதுளை, கைலகொட பகுதியை சேர்ந்த ஒரு குழுவினர் இந்த விபத்தில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் 10 வயது குழந்தை உட்பட ஐந்து ஆண்களும் ஆறு பெண்களும் காயமடைந்தவர்களில் அடங்குவதாகவும், சிற்றூர்ந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்தில் இருந்து பதுளைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சிற்றூர்ந்தின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின்போது காயமடைந்தவர்களை காலவ்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.குறித்த விபத்தில் சிற்றூர்ந்து பலத்த சேதமடைந்துள்ளது.இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைகிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.