மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகனை தந்தை, கத்தியால் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் டெல்லி - சாஹர்பூர் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகள் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கடந்த சில ஆண்டுகளுக்குமுன் மனைவி உயிரிழந்த நிலையில் 4 பிள்ளைகளையும் குறித்த தந்தை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், அந்த தொழிலாளியின் 10 வயது மகன் நேற்று மழையில் விளையாட ஆசைப்பட்டுள்ளார்.
இது குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால், மழையில் நனையக்கூடாது என்று தந்தை கண்டித்துள்ளார்.
ஆனால், தந்தையின் பேச்சை கேட்காமல் மழையில் விளையாட ஆசைப்பட்ட சிறுவன் அடம்பிடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகன் என்றும் பாராமல் சிறுவனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் மகனை கத்தியால் குத்திக்கொன்ற தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகன்; கத்தியால் குத்திக் கொன்ற தந்தை மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகனை தந்தை, கத்தியால் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் டெல்லி - சாஹர்பூர் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகள் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் மனைவி உயிரிழந்த நிலையில் 4 பிள்ளைகளையும் குறித்த தந்தை வளர்த்து வந்தார்.இந்நிலையில், அந்த தொழிலாளியின் 10 வயது மகன் நேற்று மழையில் விளையாட ஆசைப்பட்டுள்ளார்.இது குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால், மழையில் நனையக்கூடாது என்று தந்தை கண்டித்துள்ளார்.ஆனால், தந்தையின் பேச்சை கேட்காமல் மழையில் விளையாட ஆசைப்பட்ட சிறுவன் அடம்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகன் என்றும் பாராமல் சிறுவனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் மகனை கத்தியால் குத்திக்கொன்ற தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.