• Apr 21 2026

சாவகச்சேரியில் சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு!

Ziya / Jan 28th 2026, 4:45 pm
image

தென்மராட்சி சிவபூமி பாடசாலை  சாவகச்சேரி வேலயுதம் வீதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந் நிகழ்வு சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் சிவபூமி பாடசாலையை நாடா வெட்டி திறந்துவைத்ததுடன் படிம கல்லையூம் திறந்து வைத்தார் .

இந் நிகழ்வில் வரவேற்புரையை சிவபூமி அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினரும் இளைப்பாறிய விரிவுரையாளருமான சி.குணசீலன் நிகழ்த்தினார் .

ஆசியுரையை நூணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம் ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ து.கு. ஜெகதீஸ்வரக்குருக்கள்,கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் நிகழ்தினார்கள் .

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி, கெளரவ விருந்தினர் கேன் பற்றுநோய் காப்பக தலைவர் வைத்திய கலாநிதி கமலா வைத்தியநாதன் ,சாவகச்சேரி நகர சபை தவிசாளர் சிறிபிரகாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

சிறப்பு உரையை தொடர்ந்து சிவபூமி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன .

இதேவேளை சிவபூமி அறக்கட்டளையானது கடந்த 25 ஆண்டுகளாக அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

பிறப்பிலேயே மனவளர்ச்சி குறைந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 2003 கோண்டாவிலிலும், 2016 இல் கிளிநொச்சியிலும்  அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. 

இந்நிலையில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் லண்டனில் வசிப்பவர்களுமாகிய  கனகசபை கதிர்காமநாதன் இரட்ணேஸ்வரி தம்பதிகள் முன்வந்து வழங்கிய இல்லத்தைப் புனரமைத்து இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெரிய பரப்பளவு கொண்ட தென்மராட்சித் திருநகரில் மாற்றுவலுவுடைய குழந்தைகளை மகிழ்வாய் வாழ வைக்க இந்த பாடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சாவகச்சேரியில் சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு தென்மராட்சி சிவபூமி பாடசாலை  சாவகச்சேரி வேலயுதம் வீதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் சிவபூமி பாடசாலையை நாடா வெட்டி திறந்துவைத்ததுடன் படிம கல்லையூம் திறந்து வைத்தார் .இந் நிகழ்வில் வரவேற்புரையை சிவபூமி அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினரும் இளைப்பாறிய விரிவுரையாளருமான சி.குணசீலன் நிகழ்த்தினார் .ஆசியுரையை நூணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம் ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ து.கு. ஜெகதீஸ்வரக்குருக்கள்,கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் நிகழ்தினார்கள் .சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி, கெளரவ விருந்தினர் கேன் பற்றுநோய் காப்பக தலைவர் வைத்திய கலாநிதி கமலா வைத்தியநாதன் ,சாவகச்சேரி நகர சபை தவிசாளர் சிறிபிரகாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்சிறப்பு உரையை தொடர்ந்து சிவபூமி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன .இதேவேளை சிவபூமி அறக்கட்டளையானது கடந்த 25 ஆண்டுகளாக அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிறப்பிலேயே மனவளர்ச்சி குறைந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 2003 கோண்டாவிலிலும், 2016 இல் கிளிநொச்சியிலும்  அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் லண்டனில் வசிப்பவர்களுமாகிய  கனகசபை கதிர்காமநாதன் இரட்ணேஸ்வரி தம்பதிகள் முன்வந்து வழங்கிய இல்லத்தைப் புனரமைத்து இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பெரிய பரப்பளவு கொண்ட தென்மராட்சித் திருநகரில் மாற்றுவலுவுடைய குழந்தைகளை மகிழ்வாய் வாழ வைக்க இந்த பாடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement