2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட,கிழக்கில் போதை பொருள் பாவனை பூஜ்ஜியமாக இருந்ததாக கட்டைக்காடு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் தெரிவித்துள்ளார்
கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
எங்களுடைய நாட்டில் போதை பொருளின் தாக்கம் அதிகரித்துள்ளது,குறிப்பாக எங்களுடைய தமிழர் தாயகம் வரலாறு காணாத அளவிற்கு போதை பொருளின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளது.
பலர் இந்த போதைப் பொருளுக்கு நாளாந்தம் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்,போதைப் பொருள் தொடர்பான செய்திகளை நாங்கள் அடிக்கடி பத்திரிகைகள் வாயிலாக பார்க்கின்றோம்.
விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் தங்களுக்குள் ஒழுக்க விழுமியங்களை கொண்டிருக்க வேண்டும்.
அதுதான் எங்களுடைய கடந்த கால வரலாறு.
அதிகமானவர்களுக்கு தெரிந்திருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதிகளில் தமிழர் தாயகத்தில் போதைப் பொருள் பூச்சியமாக இருந்தது.
ஆனால் இப்போது போதைப் பொருள் தொடர்பான புதுப்புது விடயங்களை நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம்.
நான் அனைத்து விளையாட்டு வீரர்களிடமும், விளையாட்டு கழகங்களிடமும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் போதையற்ற ஒரு நல்ல சமுதாயத்தை நாங்கள் உருவாக்குவதற்கு இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் எங்களுக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.
போட்டிகளில் நீங்கள் சிறந்த முறையில் விளையாட வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஒரு ஆரோக்கியமான உடலை கொண்டிருக்க வேண்டும்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஆரோக்கியம் மிக முக்கியமானது. இன்று வாழ வேண்டிய பலர் தங்களுடைய வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆகவே 2009 ஆண்டிற்கு முன்னர் இருந்த வாழ்வியலை மீண்டும் கட்டியெழுப்பி நாம் அனைவரும் போதையற்ற ஒழுக்க சீலர்களாக சமூகத்தில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென மேலும் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு வரை போதைப் பொருள் பாவனை பூச்சியம் -அருட்தந்தை வசந்தன் தெரிவிப்பு 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட,கிழக்கில் போதை பொருள் பாவனை பூஜ்ஜியமாக இருந்ததாக கட்டைக்காடு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் தெரிவித்துள்ளார்கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தாவது,எங்களுடைய நாட்டில் போதை பொருளின் தாக்கம் அதிகரித்துள்ளது,குறிப்பாக எங்களுடைய தமிழர் தாயகம் வரலாறு காணாத அளவிற்கு போதை பொருளின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளது.பலர் இந்த போதைப் பொருளுக்கு நாளாந்தம் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்,போதைப் பொருள் தொடர்பான செய்திகளை நாங்கள் அடிக்கடி பத்திரிகைகள் வாயிலாக பார்க்கின்றோம்.விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் தங்களுக்குள் ஒழுக்க விழுமியங்களை கொண்டிருக்க வேண்டும்.அதுதான் எங்களுடைய கடந்த கால வரலாறு.அதிகமானவர்களுக்கு தெரிந்திருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதிகளில் தமிழர் தாயகத்தில் போதைப் பொருள் பூச்சியமாக இருந்தது.ஆனால் இப்போது போதைப் பொருள் தொடர்பான புதுப்புது விடயங்களை நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம்.நான் அனைத்து விளையாட்டு வீரர்களிடமும், விளையாட்டு கழகங்களிடமும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் போதையற்ற ஒரு நல்ல சமுதாயத்தை நாங்கள் உருவாக்குவதற்கு இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் எங்களுக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.போட்டிகளில் நீங்கள் சிறந்த முறையில் விளையாட வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஒரு ஆரோக்கியமான உடலை கொண்டிருக்க வேண்டும்.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஆரோக்கியம் மிக முக்கியமானது. இன்று வாழ வேண்டிய பலர் தங்களுடைய வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்ஆகவே 2009 ஆண்டிற்கு முன்னர் இருந்த வாழ்வியலை மீண்டும் கட்டியெழுப்பி நாம் அனைவரும் போதையற்ற ஒழுக்க சீலர்களாக சமூகத்தில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென மேலும் தெரிவித்தார்.