• May 19 2026

ஓடும் புகையிரதத்தில் 400 காட்டுக் கிளிகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இளைஞர் கைது!

Ziya / Jan 7th 2026, 5:04 pm
image

உத்தரப் பிரதேசம் வாரணாசியில், பஞ்சாப் மெயில் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் 400 காட்டுக் கிளிகள் பொலிஸாரினால்  மீட்கப்பட்டுள்ளன.

அமேதியிலிருந்து மேற்கு வங்காளத்தின் பர்தாமானுக்கு ரயில் மூலம் அதிக அளவிலான காட்டு கிளிகளை கடத்தப்பட உள்ளதாக, வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான BirdLife நிறுவனத்திடமிருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, வாரணாசி கண்டோன்மென்ட் புகையிரத  நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

சோதனையின் போது, பஞ்சாப் மெயில் புகையிரதத்தின் ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் பிடிபட்டார்.

அவரை சோதனை செய்த போது, சாக்குகள் மற்றும் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் 400 காட்டுக் கிளிகள் மீட்கப்பட்டன. 

அனைத்து கிளிகளும் உயிருடன் இருந்தாலும், அவை மிக நெரிசலான மற்றும் மனிதாபிமானமற்ற சூழலில் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில், மேற்கு வங்காளம் பர்தாமான் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜாஹித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆரம்ப கட்ட விசாரணையில், அமேதியிலிருந்து பர்தாமானுக்கு கிளிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்துச் சென்றதாக அவர் ஒப்புக்கொண்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கிளிகள் அனைத்தும் காட்டு இனத்தைச் சேர்ந்தவை என்றும், அவற்றின் வர்த்தகமும் போக்குவரத்தும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்வும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பாக வனத்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு, கிளிகள் அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

வனத்துறை அதிகாரிகள், கிளிகளின் சுகாதார நிலை, இனம் மற்றும் கடத்தல் தொடர்பான அம்சங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர். 

அதே நேரத்தில், மீட்கப்பட்ட பறவைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி, மறுவாழ்வு அளிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


ஓடும் புகையிரதத்தில் 400 காட்டுக் கிளிகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இளைஞர் கைது உத்தரப் பிரதேசம் வாரணாசியில், பஞ்சாப் மெயில் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் 400 காட்டுக் கிளிகள் பொலிஸாரினால்  மீட்கப்பட்டுள்ளன.அமேதியிலிருந்து மேற்கு வங்காளத்தின் பர்தாமானுக்கு ரயில் மூலம் அதிக அளவிலான காட்டு கிளிகளை கடத்தப்பட உள்ளதாக, வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான BirdLife நிறுவனத்திடமிருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, வாரணாசி கண்டோன்மென்ட் புகையிரத  நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.சோதனையின் போது, பஞ்சாப் மெயில் புகையிரதத்தின் ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் பிடிபட்டார்.அவரை சோதனை செய்த போது, சாக்குகள் மற்றும் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் 400 காட்டுக் கிளிகள் மீட்கப்பட்டன. அனைத்து கிளிகளும் உயிருடன் இருந்தாலும், அவை மிக நெரிசலான மற்றும் மனிதாபிமானமற்ற சூழலில் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த வழக்கில், மேற்கு வங்காளம் பர்தாமான் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜாஹித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணையில், அமேதியிலிருந்து பர்தாமானுக்கு கிளிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்துச் சென்றதாக அவர் ஒப்புக்கொண்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.மீட்கப்பட்ட கிளிகள் அனைத்தும் காட்டு இனத்தைச் சேர்ந்தவை என்றும், அவற்றின் வர்த்தகமும் போக்குவரத்தும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்வும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வனத்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு, கிளிகள் அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.வனத்துறை அதிகாரிகள், கிளிகளின் சுகாதார நிலை, இனம் மற்றும் கடத்தல் தொடர்பான அம்சங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர். அதே நேரத்தில், மீட்கப்பட்ட பறவைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி, மறுவாழ்வு அளிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement