• May 20 2026

18 வயதில் பனிச்சறுக்கு பயணத்தில் இந்திய இளம் பெண் சாதனை!

Ziya / Jan 3rd 2026, 1:52 pm
image

கடற்படை அதிகாரியின் மகள் 18 வயதில் தென் துருவத்தில் பனிச்சறுக்குப்பயணம் செய்து  சாதனை படைத்துள்ளார்.


இந்திய கடற்படை அதிகாரியின் மகள் காம்யா கார்த்திகேயன், 18 வயதில் தென் துருவத்திற்கு பனிச்சறுக்குப்பயணம் செய்து, இளைய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.


இதன் போது -30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் பலத்த காற்றை தாங்கி, காம்யா 89 டிகிரி தெற்கிலிருந்து சுமார் 60 கடல் மைல்கள் (115 கி.மீ) நடந்து சென்று, தனது முழு பயண சுமையுடன் கூடிய சறுக்கு வண்டியுடன் தென் துருவத்தை அடைந்தார் என  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த சாதனையை இந்திய கடற்படை X கணக்கில் பகிர்ந்து, காம்யாவை வாழ்த்தியுள்ளது.


அவர் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களை ஏறி இரு துருவங்களுக்கும் பனிச்சறுக்குப்பயணம் செய்த உலகின் இரண்டாவது இளைய பெண் என்ற வரலாற்றையும் மீட்டுள்ளார்.


“காம்யாவின் அசாதாரண சாதனை, அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரை தங்கள் எல்லைகளைத் தாண்டி முன்னேறத் தூண்டும்” என கடற்படையிளர் வாழ்த்தினர்.

18 வயதில் பனிச்சறுக்கு பயணத்தில் இந்திய இளம் பெண் சாதனை கடற்படை அதிகாரியின் மகள் 18 வயதில் தென் துருவத்தில் பனிச்சறுக்குப்பயணம் செய்து  சாதனை படைத்துள்ளார்.இந்திய கடற்படை அதிகாரியின் மகள் காம்யா கார்த்திகேயன், 18 வயதில் தென் துருவத்திற்கு பனிச்சறுக்குப்பயணம் செய்து, இளைய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.இதன் போது -30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் பலத்த காற்றை தாங்கி, காம்யா 89 டிகிரி தெற்கிலிருந்து சுமார் 60 கடல் மைல்கள் (115 கி.மீ) நடந்து சென்று, தனது முழு பயண சுமையுடன் கூடிய சறுக்கு வண்டியுடன் தென் துருவத்தை அடைந்தார் என  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சாதனையை இந்திய கடற்படை X கணக்கில் பகிர்ந்து, காம்யாவை வாழ்த்தியுள்ளது.அவர் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களை ஏறி இரு துருவங்களுக்கும் பனிச்சறுக்குப்பயணம் செய்த உலகின் இரண்டாவது இளைய பெண் என்ற வரலாற்றையும் மீட்டுள்ளார்.“காம்யாவின் அசாதாரண சாதனை, அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரை தங்கள் எல்லைகளைத் தாண்டி முன்னேறத் தூண்டும்” என கடற்படையிளர் வாழ்த்தினர்.

Advertisement

Advertisement

Advertisement