• Nov 15 2025

மன்னாரில் மத சுதந்திரம் தொடர்பான செயலமர்வு!

shanuja / Nov 13th 2025, 2:14 pm
image

மன்னார் கிராம அபிவிருத்தி நிறுவன பயிற்சி வளாகத்தில் மதம் அல்லது மத நம்பிக்கை, மத சுதந்திரம்  எனும் தலைப்பிலான செயலமர்வு  இன்று  இடம்பெற்றுள்ளது.


NCEASL (National Christian Evangelical Alliance of Sri Lanka)  என்ற நிறுவன அனுசரனையுடன் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் (RDF) மன்னார் கிளைக்காரியாலயத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.


மன்னார் கிளைக்காரியாலய உத்தியோகஸ்தர்களின் ஒழுங்கமைப்பில்  கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.ஏ.றமீஸ்  தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில்   மாதங்கி உதயபாலன், அப்கர் ஹஸன் ஆகியோர் விரிவுரைகளை வழங்கியிருந்தனர் .


இந்த செயலமர்வில் தலைமன்னார் பியர், மற்றும் வட்டக்கண்டல் கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செயப்பட்ட பல்லினம் சார் 35 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.


இதன் போது ,எமது ஒவ்வொரு சமய அடையாளங்களையும், நம்பிக்கைகளையும், உரிமைகளையும் எவ்வாறு மதித்தல் என்றும் அவற்றை அவமதிப்பது பற்றியும் அவை மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.


அத்துடன், இலங்கையில் மத சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கை தொடர்பான உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களையும் முன்வைத்து விளக்கமளிக்கப்பட்டது.

மன்னாரில் மத சுதந்திரம் தொடர்பான செயலமர்வு மன்னார் கிராம அபிவிருத்தி நிறுவன பயிற்சி வளாகத்தில் மதம் அல்லது மத நம்பிக்கை, மத சுதந்திரம்  எனும் தலைப்பிலான செயலமர்வு  இன்று  இடம்பெற்றுள்ளது.NCEASL (National Christian Evangelical Alliance of Sri Lanka)  என்ற நிறுவன அனுசரனையுடன் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் (RDF) மன்னார் கிளைக்காரியாலயத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.மன்னார் கிளைக்காரியாலய உத்தியோகஸ்தர்களின் ஒழுங்கமைப்பில்  கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.ஏ.றமீஸ்  தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில்   மாதங்கி உதயபாலன், அப்கர் ஹஸன் ஆகியோர் விரிவுரைகளை வழங்கியிருந்தனர் .இந்த செயலமர்வில் தலைமன்னார் பியர், மற்றும் வட்டக்கண்டல் கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செயப்பட்ட பல்லினம் சார் 35 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.இதன் போது ,எமது ஒவ்வொரு சமய அடையாளங்களையும், நம்பிக்கைகளையும், உரிமைகளையும் எவ்வாறு மதித்தல் என்றும் அவற்றை அவமதிப்பது பற்றியும் அவை மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இலங்கையில் மத சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கை தொடர்பான உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களையும் முன்வைத்து விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement