• Apr 20 2026

சேமிப்பு முனையங்களிலிருந்து எரிபொருள் விடுவிக்கப்படாது? வெளிவரும் செய்திகளுக்கு மறுப்பு

Chithra / Mar 20th 2026, 2:59 pm
image

நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) சேமிப்பு முனையங்களிலிருந்து எரிபொருள் விடுவிக்கப்படாது என்று கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.


அதேநேரம், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமரா தெரிவித்துள்ளது.


மேலும், வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் இரட்டை எண்ணாக உள்ள வாகனங்களுக்கு மட்டுமே இன்று (20) எரிபொருள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 


QR குறியீடு மற்றும் ஒற்றை/இரட்டை முறைப்படி எரிபொருள் வழங்குவதன் மூலம், நெரிசல் குறைக்கப்பட்டு, அனைவரும் மிகவும் வசதியாக எரிபொருளைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 


இதேவேளை புதிய எரிபொருள் கியூ. ஆர் குறியீடுகளை மோசடிகளுக்காக உருவாக்கியமை தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.


அதன்படி ஒரே நாளில் சுமார் 600,000 புதிய  கியூ. ஆர் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. முறைமையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாளில், தனிநபர்கள் சிலர் அதனைப் பயன்படுத்தி மற்றவர்களின் வாகனங்களுக்காக அங்கீகரிக்கப்படாத  கியூ. ஆர்  குறியீடுகளை உருவாக்கியுள்ளனர்.


சேமிப்பு முனையங்களிலிருந்து எரிபொருள் விடுவிக்கப்படாது வெளிவரும் செய்திகளுக்கு மறுப்பு நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) சேமிப்பு முனையங்களிலிருந்து எரிபொருள் விடுவிக்கப்படாது என்று கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.அதேநேரம், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமரா தெரிவித்துள்ளது.மேலும், வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் இரட்டை எண்ணாக உள்ள வாகனங்களுக்கு மட்டுமே இன்று (20) எரிபொருள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். QR குறியீடு மற்றும் ஒற்றை/இரட்டை முறைப்படி எரிபொருள் வழங்குவதன் மூலம், நெரிசல் குறைக்கப்பட்டு, அனைவரும் மிகவும் வசதியாக எரிபொருளைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை புதிய எரிபொருள் கியூ. ஆர் குறியீடுகளை மோசடிகளுக்காக உருவாக்கியமை தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.அதன்படி ஒரே நாளில் சுமார் 600,000 புதிய  கியூ. ஆர் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. முறைமையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாளில், தனிநபர்கள் சிலர் அதனைப் பயன்படுத்தி மற்றவர்களின் வாகனங்களுக்காக அங்கீகரிக்கப்படாத  கியூ. ஆர்  குறியீடுகளை உருவாக்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement