கந்தளாய், பன்சலகொடல்ல பகுதியில் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானை ஒன்று, மின்கம்பத்தை தாக்கியதாள் மின்சாரக் கட்டமைப்பிற்கும் பெரும் சேதத்தை விளைவித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (31) அதிகாலை 4:00 மணியளவில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, முதலில் அப்பகுதியிலுள்ள வயல் நிலங்களைச் சேதப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, வீதி ஓரத்தில் இருந்த மின் கம்பம் ஒன்றின் மீது யானை தாக்குதல் நடத்தியதில், மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது.
மின் கம்பம் சரிந்து விழுந்ததில், குறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீட்டர் (Electricity Meter) முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
இதனால் அந்த வீட்டிற்கான மின்சார விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மின்சார சபை ஊழியர்கள் உடனடியாக இடத்திற்கு வருகை தந்துள்ளனர். பாதுகாப்பு கருதி சேதமடைந்த மின்சாரக் கட்டமைப்புகளைக் கழற்றிச் சென்றுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக இப்பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்தளாயில் காட்டு யானை அட்டகாசம்; மின் கம்பம் மற்றும் மின்சார மீற்றர் சேதம் கந்தளாய், பன்சலகொடல்ல பகுதியில் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானை ஒன்று, மின்கம்பத்தை தாக்கியதாள் மின்சாரக் கட்டமைப்பிற்கும் பெரும் சேதத்தை விளைவித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று (31) அதிகாலை 4:00 மணியளவில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, முதலில் அப்பகுதியிலுள்ள வயல் நிலங்களைச் சேதப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, வீதி ஓரத்தில் இருந்த மின் கம்பம் ஒன்றின் மீது யானை தாக்குதல் நடத்தியதில், மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது.மின் கம்பம் சரிந்து விழுந்ததில், குறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீட்டர் (Electricity Meter) முழுமையாகச் சேதமடைந்துள்ளது.இதனால் அந்த வீட்டிற்கான மின்சார விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மின்சார சபை ஊழியர்கள் உடனடியாக இடத்திற்கு வருகை தந்துள்ளனர். பாதுகாப்பு கருதி சேதமடைந்த மின்சாரக் கட்டமைப்புகளைக் கழற்றிச் சென்றுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.தொடர்ச்சியாக இப்பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.