2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட, 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான முரளி ரகுநாதன், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2016ஆம் ஆண்டு ஹட்டன் நகரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், ஹட்டன் நகரில் முன்மொழியப்பட்ட அபிவிருத்திப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் தொடர்ந்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஹட்டன் நகர பேருந்து நிலையம், அதனைச் சுற்றியுள்ள வீதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசரத் தேவை காணப்படுவதாகவும் முரளி ரகுநாதன் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இப்பிரச்சினைகள் காரணமாக ஹட்டன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டபோது, திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ஹட்டன் மக்கள் மகிழ்ச்சியடைந்ததாகவும், ஆனால் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால் மக்கள் மேலும் ஏமாற்றத்திற்கும் அதிருப்திக்கும் உள்ளாகக்கூடும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இந்த விடயத்தை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கவனத்தில் கொண்டு, எவ்வித தாமதமும் இன்றி ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹட்டன் மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி உடனடியாக கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
9 ஆண்டுகளாக காத்திருக்கும் ஹட்டன் மக்களுக்கு எப்போது தீர்வு ஜனாதிபதியிடம் உடனடி நடவடிக்கை கோரும் முரளி ரகுநாதன் 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட, 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதிய தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான முரளி ரகுநாதன், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.அதன்படி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2016ஆம் ஆண்டு ஹட்டன் நகரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.எனினும், அந்த நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால், ஹட்டன் நகரில் முன்மொழியப்பட்ட அபிவிருத்திப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் தொடர்ந்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக, ஹட்டன் நகர பேருந்து நிலையம், அதனைச் சுற்றியுள்ள வீதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசரத் தேவை காணப்படுவதாகவும் முரளி ரகுநாதன் குறிப்பிட்டுள்ளார்.பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இப்பிரச்சினைகள் காரணமாக ஹட்டன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டபோது, திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ஹட்டன் மக்கள் மகிழ்ச்சியடைந்ததாகவும், ஆனால் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால் மக்கள் மேலும் ஏமாற்றத்திற்கும் அதிருப்திக்கும் உள்ளாகக்கூடும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.எனவே, இந்த விடயத்தை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கவனத்தில் கொண்டு, எவ்வித தாமதமும் இன்றி ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.ஹட்டன் மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி உடனடியாக கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.