• May 08 2025

அர்ச்சுனா எம்.பி தொடர்பில் நாளை உரிய பதிலை வழங்குவோம்:அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதி..!

Sharmi / May 8th 2025, 4:48 pm
image

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சிறப்புரிமை தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடி அதற்கான யோசனைகளை முன்வைத்திருக்கின்றோம் என கிராமப்புற மேம்பாடு சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பிரஸ்தாபித்த அர்ச்சுனா எம்.பி, பாராளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் ஒதுக்காமை  ,சிறப்புரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை அதாவது ஹோட்டல் ஒன்றில் தாக்குதலுக்கு  உள்ளாமை ,போக்குவரத்து சட்ட  மீறல் தொடர்பான பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக அமைச்சர் உபாலி பன்னிலகே பதில் அளிக்கையில், குழுவில் கலந்துரையாடி அதற்கான யோசனைகளை முன்வைத்திருக்கின்றோம் 

அது பற்றி குழுவில் ஆராய்ந்து இருக்கின்றோம். தேவையான சான்றுகளை ஆராய்ந்த பிறகு அவருக்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோம்.

போக்குவரத்து சட்ட  மீறல் தொடர்பான பிரச்சனை தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். நாளைய தினம் பதில் அளிக்கப்படும் என பதிலளித்துள்ளார்.

அர்ச்சுனா எம்.பி தொடர்பில் நாளை உரிய பதிலை வழங்குவோம்:அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதி. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சிறப்புரிமை தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடி அதற்கான யோசனைகளை முன்வைத்திருக்கின்றோம் என கிராமப்புற மேம்பாடு சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பிரஸ்தாபித்த அர்ச்சுனா எம்.பி, பாராளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் ஒதுக்காமை  ,சிறப்புரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை அதாவது ஹோட்டல் ஒன்றில் தாக்குதலுக்கு  உள்ளாமை ,போக்குவரத்து சட்ட  மீறல் தொடர்பான பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக அமைச்சர் உபாலி பன்னிலகே பதில் அளிக்கையில், குழுவில் கலந்துரையாடி அதற்கான யோசனைகளை முன்வைத்திருக்கின்றோம் அது பற்றி குழுவில் ஆராய்ந்து இருக்கின்றோம். தேவையான சான்றுகளை ஆராய்ந்த பிறகு அவருக்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோம்.போக்குவரத்து சட்ட  மீறல் தொடர்பான பிரச்சனை தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். நாளைய தினம் பதில் அளிக்கப்படும் என பதிலளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement