• Jan 14 2025

இன்னும் 300 மதுபான உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம்! அநுர அரசுக்கு ரணில் பதிலடி

Chithra / Dec 8th 2024, 7:35 am
image

 

கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமானவை அல்ல எனவும், அடுத்த ஆண்டு இன்னும் 300 உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் மதுபான அனுமதிப்பத்திரங்களை இலஞ்சமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளது. அவை சட்டவிரோதமாக வழங்கப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை.

ஒவ்வொன்றும் 10, 15, 20 மில்லியனுக்கு விற்கப்பட்டது. நேரடி வரிகள் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் இவை.

இந்த அனுமதிப்பத்திரங்களில் அரசாங்கத்தின் வருமானத்தில் நான்கிலிருந்து ஐந்து பில்லியன் வரை சேர்த்திருக்கலாம். நான் ஏன் யாருக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டும்? இவை எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை.

சில எம்.பி.க்கள் உரிமம் பெற சிலரை அனுப்பி வைத்தனர். ஆனால் நான் யாருக்கும் கொடுக்கவில்லை. அதனால்தான் யாரும் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்கவில்லை என்றார்.


இன்னும் 300 மதுபான உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம் அநுர அரசுக்கு ரணில் பதிலடி  கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமானவை அல்ல எனவும், அடுத்த ஆண்டு இன்னும் 300 உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கம் மதுபான அனுமதிப்பத்திரங்களை இலஞ்சமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளது. அவை சட்டவிரோதமாக வழங்கப்படவில்லை.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை.ஒவ்வொன்றும் 10, 15, 20 மில்லியனுக்கு விற்கப்பட்டது. நேரடி வரிகள் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் இவை.இந்த அனுமதிப்பத்திரங்களில் அரசாங்கத்தின் வருமானத்தில் நான்கிலிருந்து ஐந்து பில்லியன் வரை சேர்த்திருக்கலாம். நான் ஏன் யாருக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டும் இவை எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை.சில எம்.பி.க்கள் உரிமம் பெற சிலரை அனுப்பி வைத்தனர். ஆனால் நான் யாருக்கும் கொடுக்கவில்லை. அதனால்தான் யாரும் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்கவில்லை என்றார்.

Advertisement

Advertisement

Advertisement