• Apr 30 2026

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து நீர் விநியோகம்!

shanu / Apr 30th 2026, 2:04 pm
image

திருகோணமலை - மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் இன்று வியாழக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இதன்போது முதலில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் வழிபாடுகள் இடம்பெற்றன.


இதன் பின்னர் விருந்தினர்களாக கலந்து கொண்ட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர,பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோரினால் வேளாண்மைச் செய்கைக்கான நீரானது திறந்து விடப்பட்டது.


மாவிலாறு அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட நீரானது  மூதூர்,சேருவில,வெருகல் பகுதியிலுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வேளாண்மைச் செய்கைக்கு பயன்படும் எனவும், இதன் மூலம் விவசாயிகள் பெருமளவில் நன்மை அடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இன்றைய நிகழ்வில் நீர்பாசண திணைக்கள பொறியியலாளர்கள்,சேருவில பிரதேச சபையின் தவிசாளர் ,மாவிலாரு அணைக்கட்டை நம்பி விவசாயி செய்யும் 43 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ,விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது . 

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து நீர் விநியோகம் திருகோணமலை - மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் இன்று வியாழக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன்போது முதலில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் வழிபாடுகள் இடம்பெற்றன.இதன் பின்னர் விருந்தினர்களாக கலந்து கொண்ட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர,பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோரினால் வேளாண்மைச் செய்கைக்கான நீரானது திறந்து விடப்பட்டது.மாவிலாறு அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட நீரானது  மூதூர்,சேருவில,வெருகல் பகுதியிலுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வேளாண்மைச் செய்கைக்கு பயன்படும் எனவும், இதன் மூலம் விவசாயிகள் பெருமளவில் நன்மை அடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இன்றைய நிகழ்வில் நீர்பாசண திணைக்கள பொறியியலாளர்கள்,சேருவில பிரதேச சபையின் தவிசாளர் ,மாவிலாரு அணைக்கட்டை நம்பி விவசாயி செய்யும் 43 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ,விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது . 

Advertisement

Advertisement

Advertisement