• Apr 15 2026

நாட்டின் சில பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை! பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராகுமாறு அறிவிப்பு

Chithra / Feb 15th 2026, 8:43 am
image


சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்  அறிவித்துள்ளது.

 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 


நுவரெலியா - வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பகுதிக்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், மாத்தளை - வில்கமுவ பகுதிக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 

இந்த நிலையில், வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

 

நிலத்தில் வெடிப்புகள் தோன்றுதல், மரங்கள் அல்லது மின் கம்பங்கள் சாய்வடைதல் மற்றும் நீரூற்றுகள் திடீரெனத் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மண்சரிவு தொடர்பான ஏதேனும் அவசர அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தையோ அல்லது அந்தந்தப் பகுதி கிராம உத்தியோகத்தரையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராகுமாறு அறிவிப்பு சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்  அறிவித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நுவரெலியா - வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பகுதிக்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாத்தளை - வில்கமுவ பகுதிக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில், வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  நிலத்தில் வெடிப்புகள் தோன்றுதல், மரங்கள் அல்லது மின் கம்பங்கள் சாய்வடைதல் மற்றும் நீரூற்றுகள் திடீரெனத் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்சரிவு தொடர்பான ஏதேனும் அவசர அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தையோ அல்லது அந்தந்தப் பகுதி கிராம உத்தியோகத்தரையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement