• May 19 2026

யுத்த வெற்றி விழா நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்! விசேட போக்குவரத்துத் திட்டம்

Chithra / May 19th 2026, 10:24 am
image

தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு இன்று (19) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் பாராளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள படை வீரர்கள் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது. 


இம்முறை நினைவு நிகழ்வில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹோன குறிப்பிட்டுள்ளார்.


இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி, ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் இராணுவத்தினரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் உட்பட 2,769 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இக்காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். 


அதற்கமைய, இன்று மாலை 3.30 மணி முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலும், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியஹேம் சந்தியிலும் கட்டுப்படுத்தப்பட்டு, பின்வரும் மாற்று வழிகளில் திருப்பி விடப்படும். 


இதனால்  பாராளுமன்ற வீதியூடாக கொழும்பிலிருந்து வெளியேற வரும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்லை, பாலன்துன, கியன்னேம் சந்தி ஊடாக பயணிக்க முடியும். 


கியன்னேம் சந்தியிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலன்துன, பத்தரமுல்லை ஊடாக பயணிக்க முடியும். 


ரஜமல்வத்த பகுதியிலிருந்து போதிராஜ மாவத்தை ஊடாக வரும் வாகனங்கள் பத்தரமுல்லை வீதியை வந்தடைந்து, தேவையான வீதி வழியே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை ஜப்பான் நட்பு வீதி சந்தியிலிருந்து கிம்புலாவல சந்தி வரை. ஜப்பான் நட்பு வீதி மின்சார சபைக்கு அருகிலிருந்து பெலவத்த வரை பேருந்துகள் மற்றும் லொறிகளை நிறுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

யுத்த வெற்றி விழா நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் விசேட போக்குவரத்துத் திட்டம் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு இன்று (19) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் பாராளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள படை வீரர்கள் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது. இம்முறை நினைவு நிகழ்வில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹோன குறிப்பிட்டுள்ளார்.இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி, ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் இராணுவத்தினரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் உட்பட 2,769 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இக்காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அதற்கமைய, இன்று மாலை 3.30 மணி முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலும், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியஹேம் சந்தியிலும் கட்டுப்படுத்தப்பட்டு, பின்வரும் மாற்று வழிகளில் திருப்பி விடப்படும். இதனால்  பாராளுமன்ற வீதியூடாக கொழும்பிலிருந்து வெளியேற வரும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்லை, பாலன்துன, கியன்னேம் சந்தி ஊடாக பயணிக்க முடியும். கியன்னேம் சந்தியிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலன்துன, பத்தரமுல்லை ஊடாக பயணிக்க முடியும். ரஜமல்வத்த பகுதியிலிருந்து போதிராஜ மாவத்தை ஊடாக வரும் வாகனங்கள் பத்தரமுல்லை வீதியை வந்தடைந்து, தேவையான வீதி வழியே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜப்பான் நட்பு வீதி சந்தியிலிருந்து கிம்புலாவல சந்தி வரை. ஜப்பான் நட்பு வீதி மின்சார சபைக்கு அருகிலிருந்து பெலவத்த வரை பேருந்துகள் மற்றும் லொறிகளை நிறுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement