வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரங்களை இணைய வழியாக பெறும் சேவை, தற்காலிகமாக செயலிழந்துள்ளது.
இது தொடர்பாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூலை 3ஆம் திகதியிலிருந்து இச்சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், ஜூலை 9ஆம் திகதி வரை சேவை செயலில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோளாறு சரிசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சேவை மீண்டும் இயங்கும் போது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில், வாகன உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வாகன வருமான அனுமதிப்பத்திர இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தம் வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரங்களை இணைய வழியாக பெறும் சேவை, தற்காலிகமாக செயலிழந்துள்ளது. இது தொடர்பாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.ஜூலை 3ஆம் திகதியிலிருந்து இச்சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், ஜூலை 9ஆம் திகதி வரை சேவை செயலில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது கோளாறு சரிசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சேவை மீண்டும் இயங்கும் போது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில், வாகன உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.