• Apr 17 2026

ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்!

shanu / Apr 3rd 2026, 10:31 pm
image

அமெரிக்காவின் போர் விமானம் ஈரானின் வான்பரப்பில்  சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரச ஊடகங்கள்  வெளியிட்ட செய்தியை  மூன்று அமெரிக்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக CNN  செய்தி வெளியிட்டுள்ளது. 


இந்நிலையில் அமெரிக்கப் படைகள்  தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறின.


ஈரானிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட படங்களை CNN ஆய்வு செய்ததில், அவை ஒரு  F-15  ரக விமானத்தினுடையது என்பது தெரியவந்துள்ளது .


மேலும் ஈரானின் அரச  ஊடகங்கங்களால் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படம், சேதமடைந்த போர் விமானத்தின் வெளியேறும் இருக்கை ஒன்று தரையில் கிடப்பதைக் காட்டுவதாகத் தெரிகிறது.


அதில் உள்ள இருக்கையானது F-15  ரக போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஒரு  மொடலுடன் ஒத்துப்போவதாகத் தெரிகிறது. தாக்குதலால் விமானத்திலிருந்து வெளியேறும் செயல்முறையின்போது விமானிகளிடமிருந்து பிரியக்கூடிய அந்த இருக்கை, சேதமடைந்திருப்பதுடன் அதன் பின்புற அமைப்பின் ஒரு பகுதியும் காணாமல் போயுள்ளது.


இது ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க விமானப்படையின்  48th Fighter Wing  படைப்பிரிவு விமானமாகும்.

 

விமானியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் ஈரானால் கூறப்பட்டுள்ளது.

ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் அமெரிக்காவின் போர் விமானம் ஈரானின் வான்பரப்பில்  சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரச ஊடகங்கள்  வெளியிட்ட செய்தியை  மூன்று அமெரிக்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக CNN  செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கப் படைகள்  தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறின.ஈரானிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட படங்களை CNN ஆய்வு செய்ததில், அவை ஒரு  F-15  ரக விமானத்தினுடையது என்பது தெரியவந்துள்ளது .மேலும் ஈரானின் அரச  ஊடகங்கங்களால் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படம், சேதமடைந்த போர் விமானத்தின் வெளியேறும் இருக்கை ஒன்று தரையில் கிடப்பதைக் காட்டுவதாகத் தெரிகிறது.அதில் உள்ள இருக்கையானது F-15  ரக போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஒரு  மொடலுடன் ஒத்துப்போவதாகத் தெரிகிறது. தாக்குதலால் விமானத்திலிருந்து வெளியேறும் செயல்முறையின்போது விமானிகளிடமிருந்து பிரியக்கூடிய அந்த இருக்கை, சேதமடைந்திருப்பதுடன் அதன் பின்புற அமைப்பின் ஒரு பகுதியும் காணாமல் போயுள்ளது.இது ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க விமானப்படையின்  48th Fighter Wing  படைப்பிரிவு விமானமாகும். விமானியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் ஈரானால் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement