• Jul 30 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா–சவூதி கூட்டணி?-டிரம்பை சந்தித்த சவூதி பாதுகாப்பு அமைச்சர்!

Ziya / Jul 30th 2026, 3:20 pm
image

ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவூதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார்.


இச்சந்திப்பில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் ஈரானுடனான மோதல் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சவூதி அரேபியா தனது பாதுகாப்பை உறுதி செய்யத் தயாராக இருந்தாலும், ஈரானுடனான பதற்றத்தை மேலும் அதிகரிப்பதைவிட, அதைத் தணிப்பதே ரியாத்தின் விருப்பம் என சவூதி தரப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜூலை 28ஆம் தேதி, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) மற்றும் சவூதி இராணுவம் ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.


அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் CENTCOM கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.


இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் ஈராக்கின் மக்கள் திரட்டல் படைகள் (PMF) தெரிவித்துள்ளது.


சவூதி பாதுகாப்பு அமைச்சர், தனது நாடு தேவையானால் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருப்பதை அமெரிக்காவிடம் தெளிவுபடுத்தியுள்ளது.


அதேவேளையில், ஈரானுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்துவது பிராந்தியத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பதற்றத்தைக் குறைப்பதே சிறந்த வழி என சவூதி தரப்பு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டிரம்பை சந்தித்த மறுநாளே சவூதி பாதுகாப்பு அமைச்சர் வெள்ளை மாளிகைக்கு சென்றிருப்பதும் கவனம் பெற்றுள்ளது.


ஈரானுக்கு எதிராக அமெரிக்கா–சவூதி கூட்டணி-டிரம்பை சந்தித்த சவூதி பாதுகாப்பு அமைச்சர் ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவூதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார்.இச்சந்திப்பில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் ஈரானுடனான மோதல் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.சவூதி அரேபியா தனது பாதுகாப்பை உறுதி செய்யத் தயாராக இருந்தாலும், ஈரானுடனான பதற்றத்தை மேலும் அதிகரிப்பதைவிட, அதைத் தணிப்பதே ரியாத்தின் விருப்பம் என சவூதி தரப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜூலை 28ஆம் தேதி, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) மற்றும் சவூதி இராணுவம் ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் CENTCOM கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் ஈராக்கின் மக்கள் திரட்டல் படைகள் (PMF) தெரிவித்துள்ளது.சவூதி பாதுகாப்பு அமைச்சர், தனது நாடு தேவையானால் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருப்பதை அமெரிக்காவிடம் தெளிவுபடுத்தியுள்ளது.அதேவேளையில், ஈரானுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்துவது பிராந்தியத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பதற்றத்தைக் குறைப்பதே சிறந்த வழி என சவூதி தரப்பு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டிரம்பை சந்தித்த மறுநாளே சவூதி பாதுகாப்பு அமைச்சர் வெள்ளை மாளிகைக்கு சென்றிருப்பதும் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement