• May 10 2026

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் - மஹிந்த திடீர் சந்திப்பு

Chithra / Jan 13th 2026, 8:39 pm
image

 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (13) காலை இடம்பெற்றது. 

கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகத் தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்துகொண்டுள்ள ஜூலி சங், எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார். 

தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஜூலி சங் ஆற்றிய சேவையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது பாராட்டினார். 

அத்துடன் இலங்கையை விட்டுப் புறப்படவுள்ள ஜூலி சங்கின் எதிர்காலப் பணிகளுக்காக முன்னாள் ஜனாதிபதி தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.


அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் - மஹிந்த திடீர் சந்திப்பு  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (13) காலை இடம்பெற்றது. கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகத் தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்துகொண்டுள்ள ஜூலி சங், எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார். தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஜூலி சங் ஆற்றிய சேவையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது பாராட்டினார். அத்துடன் இலங்கையை விட்டுப் புறப்படவுள்ள ஜூலி சங்கின் எதிர்காலப் பணிகளுக்காக முன்னாள் ஜனாதிபதி தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement