சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 13 தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுவரெலியா கல்வி வலயத்தின் கீழுள்ள 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹட்டன் கல்வி வலயத்தின் கீழுள்ள 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களால் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, அந்தந்த பாடசாலை நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஏனைய பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற வானிலை: நுவரெலியா, ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 13 தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, நுவரெலியா கல்வி வலயத்தின் கீழுள்ள 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹட்டன் கல்வி வலயத்தின் கீழுள்ள 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களால் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.இதற்கமைய, அந்தந்த பாடசாலை நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட ஏனைய பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.