• May 09 2026

யாழில் இடம்பெற்ற கோரவிபத்தில் சிறுமி உட்பட இருவர் படுகாயம்...!samugammedia

Ziya / Jan 5th 2024, 8:38 pm
image

இன்று மாலை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கப் ரக வாகனம், கல்லூண்டாய் வைரவர் கோவிலில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமியும் ஆணொருவரும் படுகாயமடைந்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



யாழில் இடம்பெற்ற கோரவிபத்தில் சிறுமி உட்பட இருவர் படுகாயம்.samugammedia இன்று மாலை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கப் ரக வாகனம், கல்லூண்டாய் வைரவர் கோவிலில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமியும் ஆணொருவரும் படுகாயமடைந்தனர்.இவ்வாறு படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement