• May 16 2026

அதிகாலை நிகழ்ந்த தொடருந்து விபத்தில் 12 பயணிகள் காயம்

Aathira / May 16th 2026, 7:59 am
image

களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையே இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், தொடருந்தின் பெட்டி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வனவாசல மற்றும் ஹுனுபிட்டியா இடையேயான இரயில் பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக பிரதான தொடருந்து பாதையின் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஹாவெலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான 12 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதிகாலை நிகழ்ந்த தொடருந்து விபத்தில் 12 பயணிகள் காயம் களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையே இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், தொடருந்தின் பெட்டி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.வனவாசல மற்றும் ஹுனுபிட்டியா இடையேயான இரயில் பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக பிரதான தொடருந்து பாதையின் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பொல்கஹாவெலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான 12 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement