• Nov 04 2024

விறகு எடுக்கச் சென்ற போது விபரீதம்...! தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதி...!samugammedia

Sharmi / Dec 30th 2023, 9:01 am
image

Advertisement

திருக்கோவில் பிரதேசத்தில் அண்மைக் காலங்களாக கரடி தாக்குதலுக்கு பலர் இலக்காகி வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு  ரூபஸ்குளம்  காட்டு பகுதியில் நேற்றையதினம்(29) கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இருவரும் கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போதே கரடியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரடி தாக்கியதில் அவர்களது  தலை மற்றும் காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இருவரும்  உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார  வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விறகு எடுக்கச் சென்ற போது விபரீதம். தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதி.samugammedia திருக்கோவில் பிரதேசத்தில் அண்மைக் காலங்களாக கரடி தாக்குதலுக்கு பலர் இலக்காகி வருகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு  ரூபஸ்குளம்  காட்டு பகுதியில் நேற்றையதினம்(29) கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான இருவரும் கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போதே கரடியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கரடி தாக்கியதில் அவர்களது  தலை மற்றும் காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இருவரும்  உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார  வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement