• Jun 14 2026

குழந்தையை கையில் ஏந்தி சென்ற தந்தைக்கு நடந்த துயரம்… குருநாகலில் விபத்து

Aathira / Jun 13th 2026, 9:23 am
image

குருநாகல் – புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தை ஒருவர், தனது 5 வயது குழந்தையை கையில் ஏந்தியவாறு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது புத்தளம் திசை நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த தந்தை பின்னர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையை கையில் ஏந்தி சென்ற தந்தைக்கு நடந்த துயரம்… குருநாகலில் விபத்து குருநாகல் – புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தை ஒருவர், தனது 5 வயது குழந்தையை கையில் ஏந்தியவாறு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.அப்போது புத்தளம் திசை நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த தந்தை பின்னர் உயிரிழந்துள்ளார்.காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement