• Nov 07 2025

151 ஆவது உலக தபால் தினம் இன்று!

shanuja / Oct 9th 2025, 10:36 am
image

நாடு முழுவதும் இன்று 151 ஆவது உலக தபால் தினம் (09) கொண்டாடப்பட்டு வருகின்றது. 



இந்த நிகழ்வையொட்டி நடைபெறும் 56ஆவது தேசிய கொண்டாட்டம் இன்று காலை பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.


உலகளாவிய தபால் சங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படி, உலகெங்கிலும் உள்ள 193 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 09 அன்று இந்த நாளைக் கொண்டாடுகின்றன.


1874 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஒக்டோபர் 09 அன்று உலகளாவிய தபால் சங்கம் என்ற அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன, அதன்படி, அந்த நாள் 1969 இல் உலக தபால் தினம் என்று பெயரிடப்பட்டது.


இதற்கிடையில், தபால் ஊழியர்கள் மேலதிக நேர ஊதியத்தை மோசடியாகப் பெற்றதாக தபால் சங்க தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று கருப்புப் பட்டை அணிந்து வேலைக்குச் செல்வதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


இது தொடர்பாக இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


151 ஆவது உலக தபால் தினம் இன்று நாடு முழுவதும் இன்று 151 ஆவது உலக தபால் தினம் (09) கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்வையொட்டி நடைபெறும் 56ஆவது தேசிய கொண்டாட்டம் இன்று காலை பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.உலகளாவிய தபால் சங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படி, உலகெங்கிலும் உள்ள 193 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 09 அன்று இந்த நாளைக் கொண்டாடுகின்றன.1874 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஒக்டோபர் 09 அன்று உலகளாவிய தபால் சங்கம் என்ற அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன, அதன்படி, அந்த நாள் 1969 இல் உலக தபால் தினம் என்று பெயரிடப்பட்டது.இதற்கிடையில், தபால் ஊழியர்கள் மேலதிக நேர ஊதியத்தை மோசடியாகப் பெற்றதாக தபால் சங்க தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று கருப்புப் பட்டை அணிந்து வேலைக்குச் செல்வதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement