கிளிநொச்சியில் இன்று காலை 10 மணியளவில் உதிர வைரவர் கோயில் அருகே ஏ9 வீதியில் டிப்பர் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டமானது டிப்பர் வாகனங்கள் டீசல் எரிபொருளுக்கு பதிலாக மண்ணெண்ணையை பயன்படுத்தி இயக்கப்படுவதோடு,
போக்குவரத்து போலீஸார் அனைத்து டிப்பர் வாகனங்களையும் பரிசோதனை செய்யாமல் சில வாகனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதால்,
பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் பாரிய நஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள்.
இதனால் அனைத்து டிப்பர் வாகனங்களையும் பரிசோதனை செய்து, அனைத்து வாகனங்களும் டீசலை பயன்படுத்த அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
குறித்த போராட்டத்தின் முடிவாக, ஒரு கிழமைக்கு வீதியால் செல்லும் டிப்பர் வாகனங்களை நிறுத்தி எரிபொருள் தொடர்பான எந்த பரிசோதனையும் மேற்கொள்ள மாட்டோம்,
ஆனால் ஒரு கிழமை பின்னர் அனைத்து வாகனங்களும் எரிபொருள் தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 21ஆம் திகதி அனைத்து டிப்பர் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கலந்து கொள்ளும் விபத்து தொடர்பான கலந்துரையாடல் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் டிப்பர் வாகன உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் இன்று காலை 10 மணியளவில் உதிர வைரவர் கோயில் அருகே ஏ9 வீதியில் டிப்பர் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.குறித்த போராட்டமானது டிப்பர் வாகனங்கள் டீசல் எரிபொருளுக்கு பதிலாக மண்ணெண்ணையை பயன்படுத்தி இயக்கப்படுவதோடு, போக்குவரத்து போலீஸார் அனைத்து டிப்பர் வாகனங்களையும் பரிசோதனை செய்யாமல் சில வாகனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதால், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் பாரிய நஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள்.இதனால் அனைத்து டிப்பர் வாகனங்களையும் பரிசோதனை செய்து, அனைத்து வாகனங்களும் டீசலை பயன்படுத்த அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.குறித்த போராட்டத்தின் முடிவாக, ஒரு கிழமைக்கு வீதியால் செல்லும் டிப்பர் வாகனங்களை நிறுத்தி எரிபொருள் தொடர்பான எந்த பரிசோதனையும் மேற்கொள்ள மாட்டோம்,ஆனால் ஒரு கிழமை பின்னர் அனைத்து வாகனங்களும் எரிபொருள் தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், 21ஆம் திகதி அனைத்து டிப்பர் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கலந்து கொள்ளும் விபத்து தொடர்பான கலந்துரையாடல் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.