• May 23 2026

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிகள்

Chithra / Aug 7th 2025, 7:47 am
image

 திருகோணமலை - நிலாவெளி பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.

தீயினை கட்டுப்படுத்த பொதுமக்கள் முனைந்தபோதும் முச்சக்கர வண்டியின் பெரும்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகிறது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

.

இதேபோன்று கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ விபத்து நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிகள்  திருகோணமலை - நிலாவெளி பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.தீயினை கட்டுப்படுத்த பொதுமக்கள் முனைந்தபோதும் முச்சக்கர வண்டியின் பெரும்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகிறது.தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இதேபோன்று கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.இந்த தீ விபத்து நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement