• May 19 2026

235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி; சாரதி படுகாயம்

Chithra / Feb 3rd 2026, 11:24 am
image

 

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் கூறுகையில், 


நுவரெலியா கந்தப்பளை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுமார் 235 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது எனத் தெரிவித்தனர் .


மேலும் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி; சாரதி படுகாயம்  நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் கூறுகையில், நுவரெலியா கந்தப்பளை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுமார் 235 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது எனத் தெரிவித்தனர் .மேலும் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

Advertisement

Advertisement

Advertisement