• Sep 04 2026

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறை

Aathira / Sep 4th 2026, 8:32 am
image

15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு, தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

கனகராயன்குளம், சலினிகம மற்றும் நந்திமித்திரகம ஆகிய பகுதிகளில் கடந்த 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சிறுமிகளுக்கு எதிராக இந்த அதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்த வவுனியா மேல் நீதிமன்றம், ஒரே நாளில் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், மூன்று எதிரிகளுக்கும் தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை குற்றவாளிகள் வழங்க வேண்டும் என்றும், தவறினால் கூடுதல் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கட்டளையிட்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறை 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு, தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.கனகராயன்குளம், சலினிகம மற்றும் நந்திமித்திரகம ஆகிய பகுதிகளில் கடந்த 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சிறுமிகளுக்கு எதிராக இந்த அதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்த வவுனியா மேல் நீதிமன்றம், ஒரே நாளில் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், மூன்று எதிரிகளுக்கும் தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.மேலும், விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை குற்றவாளிகள் வழங்க வேண்டும் என்றும், தவறினால் கூடுதல் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கட்டளையிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement