• Apr 30 2025

மாதகலில் கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது!

Thansita / Apr 28th 2025, 10:39 pm
image

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இன்றையதினம் கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சாவும், மூன்று வாளும் ஒரு குறிப்பிட்ட ஆயுதமும் மீட்கப்பட்டது.

சந்தேகநபர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 

விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதகலில் கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இன்றையதினம் கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சாவும், மூன்று வாளும் ஒரு குறிப்பிட்ட ஆயுதமும் மீட்கப்பட்டது.சந்தேகநபர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement