• Apr 24 2026

எண்ணெய் விலை அதிகரிப்பை ஏற்காதோர் “முட்டாள்கள்”! ட்ரம்பின் ட்ரூத் சோசியல் பதிவு

Chithra / Mar 9th 2026, 8:31 am
image


அமெரிக்கா மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஈரானின் அணு மிரட்டலை முழுமையாக அழிக்கும் வரை எண்ணெய் விலை குறுகிய காலம் உயர்ந்தாலும் அது மிகச் சிறிய விலை தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


அவர் தனது சமூகவலைத்தளமாக ட்ரூத் சோசியலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


அவர் “அதிகரித்த எண்ணெய் விலை இறைவனை மறைத்து விடும் போது விரைவாக வீழும், இது அமெரிக்காவிற்கும், உலகத்திற்கும், பாதுகாப்புக்கும் அமைதிக்கும் ஒரு மிகவும் சிறிய செலவு தான். முட்டாள்கள் மட்டுமே வித்தியாசமாகச் சிந்திப்பார்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.


மத்திய கிழக்கின் போர் பதற்றத்தின் மத்தியில் எண்ணெய் விலை நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில் ட்ரம்பின் இந்த பதிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதேவேளை விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக நியமிக்கப்படும் ஈரானின் அடுத்த அதி உயர் தலைவர், முதலில் தமது ஒப்புதலைப் பெறத் தவறினால் அவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில்  மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 


ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. 


இந்நிலையில் அதற்குப் பதிலடியாக இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18% உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. 


அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 20% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 

எண்ணெய் விலை அதிகரிப்பை ஏற்காதோர் “முட்டாள்கள்” ட்ரம்பின் ட்ரூத் சோசியல் பதிவு அமெரிக்கா மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஈரானின் அணு மிரட்டலை முழுமையாக அழிக்கும் வரை எண்ணெய் விலை குறுகிய காலம் உயர்ந்தாலும் அது மிகச் சிறிய விலை தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அவர் தனது சமூகவலைத்தளமாக ட்ரூத் சோசியலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.அவர் “அதிகரித்த எண்ணெய் விலை இறைவனை மறைத்து விடும் போது விரைவாக வீழும், இது அமெரிக்காவிற்கும், உலகத்திற்கும், பாதுகாப்புக்கும் அமைதிக்கும் ஒரு மிகவும் சிறிய செலவு தான். முட்டாள்கள் மட்டுமே வித்தியாசமாகச் சிந்திப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.மத்திய கிழக்கின் போர் பதற்றத்தின் மத்தியில் எண்ணெய் விலை நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில் ட்ரம்பின் இந்த பதிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.இதேவேளை விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக நியமிக்கப்படும் ஈரானின் அடுத்த அதி உயர் தலைவர், முதலில் தமது ஒப்புதலைப் பெறத் தவறினால் அவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில்  மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. இந்நிலையில் அதற்குப் பதிலடியாக இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18% உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 20% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement